இலவச வெளிப்பாட்டைப் பாதுகாக்கும் மற்றும் பாதுகாப்பான உலகளாவிய தகவல்தொடர்புகளை செயல்படுத்தும் திறந்த மூல தனியுரிமை தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு சிக்னலில் உள்ள குழு கடமைப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பு இந்த நோக்கத்தை ஆதரிக்கிறது. விளம்பரங்கள் இல்லை. டிராக்கர்கள் இல்லை. கேளிக்கை இல்லை.
உங்கள் நன்கொடையானது தனிப்பட்ட மற்றும் உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்கள் பயன்படுத்தும் ஆப்பின் மேம்பாடு, கணிப்பொறி சேவையகங்கள் மற்றும் அலைவரிசைக்கு பணம் செலுத்த உதவுகிறது.
நீங்கள் மின்னஞ்சலை வழங்கினால், உங்கள் வரி பதிவுகளுக்கான மின்னஞ்சல் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். சிக்னல் தொழில்நுட்ப அறக்கட்டளை என்பது ஒரு சுயாதீனமான இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்நாட்டு வருவாய் குறியீடு பிரிவு 501c3 -இன் கீழ் வரிவிலக்கு பெற்றதாகும். எங்கள் ஃபெடரல் டேக்ஸ் ஐடி எண் 82-4506840.
குறிப்பு: சிக்னல் ஆப்பில் கூகுல் பே அல்லது ஆப்பிள் பே பயன்படுத்துவதற்கு மாறாக, நீங்கள் இங்கே நன்கொடை அளித்தால் சிக்னலால் பேட்ஜ்களை வழங்க முடியாது.
சிக்னலுக்கான கிரிப்டோகரன்சி நன்கொடைகள் தி கிவிங் பிளாக் மூலம் செயலாக்கப்படும்.
உங்கள் கிரிப்டோகரன்சி நன்கொடையின் நியாயமான சந்தை மதிப்புக்கு அமெரிக்காவில் வரி விலக்கு பெற விரும்பினால், வரி ரசீதைப் பெறுவதற்கு உங்கள் விருப்பப்படி மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம். தி கிவிங் பிளாக் பெயரில்லாத நன்கொடைகளையும் ஆதரிக்கிறது.