சுதந்திரமாக பேசுங்கள்

வேறு செய்தியிடல் அனுபவத்திற்கு "ஹலோ" என்று சொல்லுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடனும் இணைந்து தனியுரிமைக்கு எதிர்பாராத ஒரு கவனம்.


சிக்னலைப் பெறுங்கள்

சிக்னலை ஏன் பயன்படுத்த வேண்டும்?

சிக்னல் ஏன் எளிய, சக்திவாய்ந்த மற்றும் பாதுகாப்பான மெசஞ்சர் என்பதைக் காண கீழே ஆராயுங்கள்

பாதுகாப்பின்மை இல்லாமல் பகிரவும்

அதிநவீன எண்ட்-டு-எண்ட் குறியாக்கம் (திறந்த மூல சிக்னல் நெறிமுறையால் இயக்கப்படுகிறது) உங்கள் உரையாடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. உங்கள் செய்திகளை எங்களால் படிக்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, மற்றும் வேறு எவராலும் முடியாது. தனியுரிமை ஒரு விருப்ப பயன்முறை அல்ல — இப்படித்தான் சிக்னல் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியிலும், ஒவ்வொரு அழைப்பிலும், ஒவ்வொரு முறையும்.

ஏதாவது சொல்லுங்கள்

உரை, குரல் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், கிஃப்கள் மற்றும் கோப்புகளை இலவசமாகப் பகிரவும். சிக்னல் உங்கள் தொலைபேசியின் தரவு இணைப்பைப் பயன்படுத்துகிறது, எனவே நீங்கள் எஸ்.எம்.எஸ் மற்றும் எம்.எம்.எஸ் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.

சுதந்திரமாக பேசுங்கள்

தொலை தூர கட்டணங்களின்றி, நகரம் முழுவதும் அல்லது கடல் தாண்டி வசிக்கும் மக்களுக்கு தெளிவான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.

தனியுரிமையை ஒட்டிக்கொள்ளுங்கள்

மறைகுறியாக்கப்பட்ட ஸ்டிக்கர்களுடன் உங்கள் உரையாடல்களில் புதிய அடுக்கு வெளிப்பாட்டைச் சேர்க்கவும். உங்கள் சொந்த ஸ்டிக்கர் பேக்குகளை உருவாக்கலாம் மற்றும் பகிரலாம்.

குழுக்களுடன் ஒன்றிணையவும்

குழு அரட்டைகள் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை எளிதாக்குகின்றன.

விளம்பரங்கள் இல்லை. டிராக்கர்கள் இல்லை. கேளிக்கை இல்லை.

சிக்னலில் எந்த விளம்பரங்களும் இல்லை, துணை சந்தைப்படுத்துபவர்களும் இல்லை, அச்ச உணர்வை தோற்றுவிக்கிற கண்காணிப்பும் இல்லை. எனவே உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுடன் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

அனைவருக்கும் இலவசம்

சிக்னல் ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற நிறுவனமாகும். நாங்கள் எந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் பிணைக்கப்படவில்லை, மேலும் ஒருபோதும் எவராலும் எங்களைப் பெற முடியாது. உங்களைப் போன்றவர்களிடமிருந்து மானியங்கள் மற்றும் நன்கொடைகளால் வளர்ச்சி ஆதரிக்கப்படுகிறது.

Signalக்கு நன்கொடை அளிக்கவும்